பாடசாலையில் மாணவர் கழகங்கள் அங்குரார்ப்பணம்

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு கல்குடா கல்லி வலயத்துக்குட்பட்ட கிரான் மத்திய கல்லுரியில் மாணவர்களின் ஆளுமையை விடுத்திக்காக மூன்றும் கழகங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கிரான் மத்திய கல்லூரியுடன் கிரான் பழைய மாணவர் அமைப்பு இணைந்து நடைமுறைப்படுத்தும் மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான விசேட செயற்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 24 கழகங்களில் முதல் மூன்று கழகங்காளான

1. மாணவர் மென்திறன் கழகம், 2 .இளம் கண்டுபிடிப்பாளர் கழகம் 3. ஊடக கழகம் என்பான கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் திரு.வ.கனகசிங்கத்தினால் உத்தியோக பூர்வமாக  இன்று புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

கிரான் மத்திய கல்லூரியின் அதிபர் திரு. மா. தவராஜா  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், கிரான் பிரதேச செயலாளர் திரு.எஸ்.ராஜ்பாபு, கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி திரு.க.அருளானந்தம், கல்குடா பிரதி கல்விப்பணிப்பாளர் திரு.கே.ஜெயவதனன் மாற்றும் கிரான் உட்ட பாடசாலைகளின் அதிபர்கள், சிவஸ்ரீ.மு.சண்முகம், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் குரு அருட்திரு. வே.உதயகுமார் கிரான் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் , கல்லூரியின் இணைப்பாசிரியர்கள், பழைய மாணவர் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.