
பாடசாலையில் துப்பாக்கிச் சூடு : நான்கு பேர் பலி
அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதுடன் 9 பேர் காயமடைந்தனர்.
குறித்த பாடசாலையில் பயிலும் 14 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் 2 மாணவர்களும் 2 ஆசிரியர்களுமே இதன் போது உயிரிழந்தனர்.
இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய சிறுவன் கைது செய்யப்பட்டு ஜோர்ஜியா பொலிஸார் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணத்தை இதுவரையில் வெளியிடவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
