பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளை புதன்கிழமை நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 24.04.2024 அன்று பாடசாலைகளின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் தொடங்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் முதல் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்