
-யாழ் நிருபர்-
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், வழமையாக பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களது எண்ணிக்கையை விட இன்று வருகை தந்த மாணவர்களது எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டது.
அத்துடன், வழமையாக மதியம் 1.30 இற்கு நிறைவடையும் பாடசாலையானது மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் 12.00 மணிக்கு நிறைவடைந்தது.
படங்கள் :- வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, விக்டோரியா கல்லூரி


