
பாசிக்குடா கடற்கரையில் சுத்தப்படுத்தும் நிகழ்வு
-வாழைச்சேனை நிருபர்-
பாசிக்குடா கடற்கரையில் மாசுபடுத்தப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கடற்கரையோரங்களில் சேர்கின்ற குப்பைகளே இவ்வாறு அகற்றப்பட்டன.
கடற் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் ரொக்லண்ட் தன்னார்வ நிறுவனத்தின் அனுசரணையில் எம்.ஈ.பி.ஏ. அமைப்பு, பெண் சுழியோடிகள் அமைப்பு, மாலு மாலு மற்றும் அமைதிஸ் சற்றுலா விடுதிகளில் கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இவ் கரையோர சுத்தப்படுத்தல் சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.
பொருளாதார நெருக்கடியில் நாடு இருக்கின்ற சூழ்நிலையில் கடற் சுற்றாடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கடற் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப் பணியில் கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட அதிகாரி சி.தயாரூபன், ரொக்லண்ட் தன்னார்வ நிறுவனத்தின் இணைப்பாளர் பாலின்ட பெரேரா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இப் பணியினை மேற்கொள்வதற்காக கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட அதிகாரி சி.தயாரூபன் 25 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பாசிக்குடாவிற்கு வந்து தமது கடமையினை மேற்கொண்டிருந்தார்.
