பாக்கிஸ்தான் பெண்ணுக்கு பொருத்தப்பட்ட இந்தியரின் இதயம் : இந்திய வைத்தியர்களின் மனிதநேய செயல்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு  சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆயிஷா ராஷன் (வயது 19). இவர் கடந்த 2019-ம் ஆண்டு இதயம் பகுதியளவு செயலிழக்கும் நிலையில் இந்தியாவிற்கு வந்தார்.

அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள்  அவருக்கு முழுமையாக இதயத்தை மாற்ற முடிவு செய்தனர்.

அவருக்கு சென்னையை சேர்ந்த உதவும் அமைப்பு ஒன்றின் மூலம் 35 லட்சம் ரூபா பண உதவி வழங்கப்பட்டு, இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு டெல்லியை சேர்ந்த மூளைச்சாவு அடைந்த 69-வயது நபர் ஒருவரின் இதயம் பொருத்தப்பட்டது.

சுமார் 6 மாதங்களுக்கு முன்பு  அவருக்கு வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. 

இவ்வளவு நாட்களாக அந்த பெண் தீவிரமான மருத்துவ கண்காணிப்பில் இருந்ததாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்