பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று மீண்டும் ஆரம்பம்
இடைநிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் இடைநிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் இன்றைய தினம் குறித்த தொடர் மீண்டும் ஆரம்பமாகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னதாக அறிவித்திருந்தது.
இதன்படி இன்றைய போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது