பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவி ஏற்பு
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் நேற்று திங்கட்கிழமை அதிபர் மாளிகையில் பதவியேற்றார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் மற்றும் ஷெபாஷ் ஷெரீப் போட்டியிட்டனர்.
இதன்போது உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்