பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

-பதுளை நிருபர்-

பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் மே மாதம் 05 ம் திகதி பாடசாலை அதிபர் சந்தனம் ராஜேந்திரா தலைமையில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதன்போது/ பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகக்குழு தெரிவு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து பாடசாலையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பழைய மாணவர்களின பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடலும் நடைபெறும்.

இக்கூட்டத்திற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை நிர்வாகம் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்