பள்ளிவாசல் தூணில் மோதிய மோட்டார் சைக்கிள்: ஒருவர் படுகாயம்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவிலுள்ள சீனக்குடா பள்ளிவாசல் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் பள்ளிவாசல் தூணில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் தோப்பூர் -அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த சௌபி (வயது – 45) என தெரியவருகிறது.
தோப்பூரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே இவ் விபத்தை எதிர் நோக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.