பளை மத்திய கல்லூரிக்கு தடைதாண்டலில் தங்கம்

-கிளிநொச்சி நிருபர்-

நடைபெற்றுவரும் வடமாகாண தடகள விளையாட்டுப்போட்டியில் 14வயது ஆண்களுக்கான தடைதாண்டலில் பளை மத்திய கல்லூரி மாணவன் மு.தனதீபன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதுவரை பளை மத்திய கல்லூரிக்கு 2 தங்கப்பதக்கங்களும்,  2 வெள்ளிப்பதக்கங்களும் கிடைத்துள்ளது.