பல வருடங்களாக வாழ்வாதாரம் மற்றும் குடிநீருக்காக போராடிய குடும்பம் ஒன்றின் பிரச்சனைக்கு தீர்வு!
-வவுனியா நிருபர்-
வவுனியா, செட்டிகுளம்-பாவற்குளம் யுனிற் – 01 பகுதியில் உள்ள முன்னாள் பாேராளி குடும்பம் ஒன்றின் நீண்டகாலப் பிரச்சனையான வாழ்வாதாரம் மற்றும் குடி நீர் என்பவற்றுக்கு தீர்வு காணும் முகமாக குடி நீர் திட்டம் ஒன்று நேற்று வியாழக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குறித்த முன்னாள் பாேராளி குடும்பம் ஊடகவியலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளரான வன்னி மைந்தனின் முயற்சியால் லண்டனில் வசிக்கும் சட்டத்தரணி பிரியன் என்பவரின் நிதி உதவியில் ‘ஊடக உறவுகளின் பாலம்’ அமைப்பின் ஊடாக குறித்த குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
செட்டிகுளம், பாவற்குளம் யுனிற் 01 பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் முன்னாள் பாேராளி குடும்பம் ஒன்று நீண்ட நாட்களாக குடிநீர் பெறுவதில் இடர்பாடுகளை எதிர் நோக்கியிருந்ததுடன், வீட்டுடன் கூடிய வீட்டுத் தோட்டத்திற்கான காணிகள் இருந்தும் நீர் இல்லாமையால் வீட்டுத் தோட்டம் செய்ய முடியாது, பாேரில் காயமுற்ற கணவன் பல்வேறு இடர்பாடுகளை எதிர் நாேக்கியிருந்தார்.
இக் குடும்பத்தின் நீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக மோட்டருடன் கூடிய குழாய் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, சிவ.கஜன், வ.பிரதீபன் ஆகியாேர் இதனை கையளித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்