பல நாட்களாக துவிச்சக்கரவண்டிகளை திருடியவர் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல நாட்களாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுவந்தவர் இன்றைய தினம் திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து தர்மபுரம் பகுதியை சேர்ந்த 49 வயது நபர் இரகசிய கமராவின் உதவியுடன் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 6 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை நாளையதினம் செவ்வாய் கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்