பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலி.வடக்கு மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்-

அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வலுப்பெற்றுள்ளன.

அந்தவகையில் இன்று வலி. வடக்கு மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தெல்லிப்பழை பேருந்து நிலையத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

போராட்டக்காரர்கள் ‘விவசாயிகள், மீனவர்களுக்கு எரிபொருளை முன்னுரிமைப்படுத்து, அத்தியாவசிய பொருட்கள் எங்கே?, வடக்கு கிழக்கு மீதான இராணுவ மயமாக்கலை நிறுத்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கு, குழந்தைகளின் பால்மா எங்கே?, வலி. வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவி’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.