பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

தெகிவளை பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திஸ்ஸமகாராம மற்றும் கொழும்பு 14 பிரதேசங்களை சேர்ந்த 26 தொடக்கம் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 13 கிராம் 600 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள், வங்கிக்கணக்கு அட்டைகள் மற்றும் பித்தளை சிலை ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் தெகிவளையில் மூன்று வீடுகளை உடைத்து கொள்ளையிட்டமை, நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை, கொகுவலவில் பண அபகரிப்புக்களை மேற்கொண்டமை மற்றும் நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியமை ஆகிய பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெகிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்