பல்ப் மாற்றினால் ரூ.1கோடி சம்பளம்!

தற்போது பார்த்து வரும் வேலையை விடப்  போகிறீர்களா? அல்லது வேறு வேலைக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? உங்களை கோடிஸ்வரராக மாற்றும் வேலை ஒன்று காத்திருக்கிறது. வெறும் பல்ப்பை மாற்றினால் ஒரு கோடி சம்பளம் கிடைக்கும் என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாம், உண்மைதான். நிறைய பேருக்கு இந்த விவரம் தெரியாது. பல அடி உயரத்தில் உள்ள பல்ப்பை மாற்றுவதற்காக கோடிக்கணக்கான பணத்தை சம்பளமாக வழங்குகிறார்கள்.

வேலை தொடர்பாக பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 1500 அடி உயரம் கொண்ட கோபுரங்களில் ஏறி அங்குள்ள பல்ப்பை மாற்ற வேண்டும். இதுதான் நீங்கள் செய்ய வேண்டிய வேலை. இதற்கு கோடிக்கணக்கில் சம்பளம்.

இது ஒன்றும் சாதாரன வேலை அல்ல. இந்த விசேஷ வேலைக்கு பல அடி உயரத்தில் வேலை பார்த்த அணுபவம் மிக்கவர்களே வர முடியும். இது வழக்கமான பல்ப் கிடையாது. இதை எல்லாராலும் செய்ய முடியாது. 600M உயரம் கொண்ட சிக்னல் கோபுரத்தில் உள்ள பல்ப்பை மாற்ற வேண்டும். மேலும், இந்த சிக்னல் கோபுரம் மற்ற கோபுரங்களை விட வித்தியாசமனது.கோபுரத்தில் உலோக தாங்கியால் கட்டப்பட்டுள்ளது. உயரம் செல்ல செல்ல இந்த உலோகத் தாங்கி மிகவும் மெல்லியதாக இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், இதன் மேல் ஏறிச் செல்பவருக்கு வேறு எந்த பாதுகாப்பு அம்சங்களும் கிடையாது. அவரைக் காப்பாற்ற வெறும் கயிறு மட்டுமே கொடுக்கப்படும் என இந்த வேலை தொடர்பாக டிக்டாக்கில் வெளியான காணொளியில் கூறப்பட்டுள்ளது.

https://twitter.com/i/status/1598800833839501312

கொஞ்சம் கவனம் தவறினாவ் உயிரையே பறித்துவிடும் இந்த வேலைக்குதான் சம்பளமாக ஒரு கோடி வழங்கப்படுகிறது. எனினும் கோபுரம் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து சம்பளம் மாறுபடும். இந்த பல்ப் மாற்றும் வேலை ஆறு மாதத்திற்கு ஒருமுறை வரும்.

இந்த வேலை குறித்த விபரம் ஜூபிள் (Jooble) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் யார் தான் வேலைக்கு வர மாட்டார்கள்? இந்த வேலைக்கு எனக்கு தகுதி இருக்கிறதா? என்னை வேலைக்கு எடுத்துக் கொள்வார்களா? என பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வேலை கிடைக்க வேண்டுமானால், முதலில் உங்களுக்கு உயரம் குறித்த பயம் அறவே இருக்க கூடாது. நல்ல உடற் தகுதியோடு இருக்க வேண்டும். வெறும் பல்ப் தானே மாட்ட வேண்டும் என நினைத்து விடக் கூடாது. இந்த வேலையை முடிக்க குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இந்த 1500 அடி சிக்னர் டவரில் ஏறும் போதும் இறங்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் டவரின் உயரத்தில் நிற்கும் போது காற்று வீசும் வேகத்தை நன்கு அறிந்து கீழே விழாமல் சமாளிக்க தெரிய வேண்டும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்