
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கு நிதியுதவி
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் பல்கலை கழகத்துக்கு தெரிவாகி பட்டப் படிப்பை தொடர பண வசதி இல்லாத தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு இன்று ஞாயிற்று கிழமை நிதியுதவி திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் எஸ்.குகதாஸனினால் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 65 மாணவ மாணவிகளுக்கு இந்நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களுக்கு தெளிவாகி பண வசதி இன்மையால் பட்டப் படிப்பை தொடர முடியாத நிலையிலும் தந்தையை இழந்து கல்வியை தொடர முடியாத நிலைமையில் எதிர்காலத்தில் நாட்டிற்காக சமூக நோக்குடன் போராடக்கூடிய இளைஞர் யுவதிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், சிறந்த கல்வியைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் இன்னும் கல்வி மான்களை உருவாக்க வேண்டும் எனவும் அதற்காகவே பல்கலைக்கழக மாணவ மாணவிகளை தெரிவு செய்துள்ளோம் எனவும் நலன்புரி சங்கத்தின் தலைவர் எஸ்.குகதாஸன் இதன் போது தெரிவித்தார்
இதற்கான நிதி உதவியை கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கி வைத்ததுடன் இதனை நலன்புரி சங்கத் தலைவர் எஸ்.குகதாசன், துணைத் தலைவர் டொக்டர் என். சரவணபவன், பொருளாளர் திரு. இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் இதற்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



