பலாலியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆலயம் மக்கள் பயன்பாட்டுக்காக கையளிப்பு!

-யாழ் நிருபர்-

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தனர்.