பலாப்பழம் நன்மைகள் தீமைகள்

பலாப்பழம் நன்மைகள் தீமைகள்

பலாப்பழம் நன்மைகள் தீமைகள்

🟢🟡முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படும் பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும் கண்ணை கவரும் வண்ணத்திலும் இருக்கும். பலாப்பழம் சுவையில் மட்டுமல்ல.அதில் அடங்கியுள்ள மருத்துவ குணத்திலும் முதன்மை தான்.

 பலாப்பழத்தின் நன்மைகள்
  1. பலாபழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.
  2. பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
  3. பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது
  4. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும். உடலும் ஊட்டம் பெறும்.
  5. பலாப்பழத்திலுள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை குடல் வால் சுழற்சி எனப்படும் “அப்பண்டிசைடிஸ்” உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது.புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது தவிர, உடல் இளமை தோற்றத்தை பெற உதவுகிறது
  6. பலாப்பழத்தின் இனிப்புச் சுவைக்குக் காரணம், இதில் உள்ள ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் தான். பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.
  7. பலாபழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது
  8. சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து  ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும்.
  9. பலாப்பழத்தில் அதிக மெக்னீசியம் உள்ளது. மெக்னீசியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த தாது கால்சியம் உறிஞ்சுதலுக்கு இன்றியமையாதது மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்புக் கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது.
  10. பலாப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதிக நார்ச்சத்து எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது சீரான குடல் இயக்கத்தை உருவாக்கி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. இது பெரிய குடலில் இருந்து புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது மற்றும் பெருங்குடல் சளி சவ்வுக்கு பாதுகாப்பை வழங்குகிறது.
பலாப்பழத்தின் தீமைகள்
  1. பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.
  2. பலாபழ விதைகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.
  3. பலா பிஞ்சினை அதிகமாய் உணபதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு,  வாத நோய்கள் ஏற்படும்.
  4. குடல் வால் சுழற்சி எனப்படும் “அப்பண்டிசைடிஸ்” உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது.

பலாப்பழம் நன்மைகள் தீமைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்