பலாங்கொடை பிரதேச சபையின் தலைவர் ராஜினாமா
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பலாங்கொடை பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் உதய குமார, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
வெற்றிடமான பதவிக்கு, கமேதிகே ஆரியதாசவை புதிய தலைவராக தெரிவு செய்வதற்கு பலாங்கொடை பிரதேச சபையின் தேர்தல் அதிகாரி சுரங்க அம்பகஹதென்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.