பலவந்தமாக இன்சுலின் செலுத்தி மனைவியை கொல்ல முயற்சி: வைத்தியர் கைது
திருகோணமலையில் தனது மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகப்படியான இன்சுலின் ஊசி மூலம் மயக்கமடைந்த பெண், ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வைத்தியர் கொழும்பிலுள்ள தமது வீட்டுக்கு அடிக்கடி வருகை தருவதில்லை என்றும் திருமணமாகி குழந்தை பேறு இல்லாத காரணத்தால் மனைவி, மருத்துவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில், சந்தேகநபரான வைத்தியர், தமது மனைவியை கொலை செய்யும் நோக்கில் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளுக்கமைய, சந்தேகநபரான வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்