
பலத்த காற்றினால் முறிந்து விழுந்த மின்கம்பம் : மின்சாரம் தடை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பனைமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
யாழப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பலத்த காற்று வீசிய சமயம் சங்கானை 07 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் நின்ற பனை மரம் திடீரென முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் இரு மின் கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளை வீதியில் எவரும் பயணிக்காததால் பெரும் அனர்த்தமும் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


