பர்ஃப்யூம் வாசனை ஆடைகளை துவைத்த பின்னரும் நீடிக்க டிப்ஸ்

காலையில் தயாராகிய பிறகு வீட்டை விட்டு கிளம்பும் பொழுது நமக்கு விருப்பமான பர்ஃப்யூம் பயன்படுத்தினால் தான் அந்த நாளே நன்றாக இருந்ததாக ஒரு சிலர் உணர்வார்கள். பர்ஃப்யூம் பயன்படுத்துவது நம்மை புதிதாக உணர வைக்கவும், வியர்வை நாற்றம் காரணமாக ஏற்படும் சங்கடத்திலிருந்து நம்மை காப்பாற்றவும் உதவுகிறது. குறிப்பாக கோடைகால மாதங்களில் அதிகப்படியான வியர்வை காரணமாக நம் மீது துர்நாற்றம் வீசத் தொடங்கும். இதற்காகவே ஒரு சிலர் பர்ஃப்யூம் பயன்படுத்த விரும்புவார்கள்.

கடைகளில் விற்பனை செய்யக்கூடிய உற்பத்திகள் ‘லாங் லாஸ்டிங்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய பர்ஃப்யூம் என்று உற்பத்திகளை விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் இது முற்றிலும் உண்மை என்று நம்மால் கூறிவிட முடியாது. நாம் பயன்படுத்தக்கூடிய பர்ஃப்யூம் நீண்ட நேரத்திற்கு நீடிப்பதற்கு நாம் ஒரு சில முயற்சி செய்து பார்க்கலாம். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பர்ஃப்யூம் நீண்ட நேரத்திற்கு நீடிக்க செய்ய உதவும் சில வழிகள்:-
நீங்கள் பயன்படுத்தும் பர்ஃப்யூம் நறுமணம் நீண்ட நேரத்திற்கு இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் குளித்துவிட்டு வந்த உடனேயே அதனை பயன்படுத்துங்கள். உங்கள் சருமம் மீது இருக்கக்கூடிய ஈரப்பதத்தை டவல் வைத்து ஒத்தி எடுத்த பிறகு உங்களுக்கு விருப்பமான பர்ஃப்யூமை நீங்கள் பயன்படுத்தலாம். உங்களது விருப்பத்திற்குரிய பர்ஃப்யூமை பயன்படுத்துவதற்கு முன்பு வாசனையற்ற மாய்சரைசர் அல்லது லோஷனை கூட நீங்கள் பூசிக் கொள்ளலாம். இவ்வாறு செய்வது சென்ட்டை சருமத்தில் ஆழமாக உறிஞ்சுவதற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் எண்ணெய் மிகுந்த அடித்தளத்தை அமைத்து தரும்.

சரியான நாடித்துடிப்பு பாயிண்ட்டுகளை அடையாளம் கண்டு அவற்றில் பர்ஃப்யூம் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த புள்ளிகளில் இருக்கக்கூடிய தமனிகள் தோலின் மேற்பரப்போடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும். இதனால் வாசனை எளிதாக பரவவும், வலுவானதாக இருக்கவும் உதவும். மணிக்கட்டு, கழுத்து, நெஞ்சுக்குழி, தொப்புள் மற்றும் கணுக்கால் போன்ற பகுதிகளில் இவற்றை நீங்கள் அடையாளம் காணலாம்.

பெரும்பாலானவர்கள் பர்ஃப்யூம் பயன்படுத்திய பிறகு மணிக்கட்டு பகுதியை தேய்ப்பதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு செய்வது பர்ஃப்யூம் சருமத்தில் ஊடுருவதற்கு முன்பே ஆவியாகிவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் பர்ஃப்யூம் உங்கள் உடலில் இருக்கக்கூடிய இயற்கையான வாசனை உடன் கலந்தால் மட்டுமே அது நாள் முழுவதும் நீடிக்கும். இது சற்று வித்தியாசமாக தோன்றினாலும் சிறிய அளவு பர்ஃப்யூமை உங்கள் தலை முடியிலும் பயன்படுத்துங்கள். தலைமுடியானது வாசனையை நீண்ட நேரத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது. எனினும்இ மிகச் சிறிய அளவு பர்ஃப்யூம் மட்டுமே நீங்கள் தலைமுடியில் பயன்படுத்த வேண்டும். மயிர் கால்களில் பர்ஃப்யூம் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தலைக்கு குளித்துஇ தலைமுடி புத்துணர்வுடன் இருக்கும் போது மட்டுமே இதனை நீங்கள் செய்ய வேண்டும்.

டியோடரெண்டுகளைப் போலவே நீங்கள் தினமும் அதிகப்படியான பர்ஃப்யூமை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. டியோடரெண்டுகளை விட பர்ஃப்யூம் வலிமையாக இருக்கக்கூடும். எனவே அவற்றை அதிகப்படியாக பயன்படுத்துவதால் தலைவலி உண்டாகும்.

பர்ஃப்யூம்களை உங்கள் ஆடைகள் மீது பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் ஆடைகளில் கறை ஏற்படலாம். மேலும் வாசனை நீண்ட நேரத்திற்கு நீடிக்காது. மாறாக அவற்றை தோல் மீது பயன்படுத்திவிட்டு அது உலர்ந்த பின் ஆடைகளை அணியுங்கள். விரைவான வெப்பநிலை மாற்றம் ஏற்படாத பகுதிகளில் பர்ஃப்யூம்களை ஸ்டோர் செய்யவும். உதாரணமாக குளியலறையில் நீங்கள் பர்ஃப்யூமை வைக்கலாம்.