பருக்கள் உடனடியாக மறைய எளிய வைத்தியம்

பருக்கள் உடனடியாக மறைய எளிய வைத்தியம்

பருக்கள் உடனடியாக மறைய எளிய வைத்தியம்

🔴முகத்தைப் பளபளப்பாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் உண்டு. பொடுகுத்தொல்லைஇ உடல் சூடு காரணமாக முகப்பரு வரலாம். அப்படி எந்த வகையினால் முகப்பரு ஏற்பட்டிருந்தாலும் எளிமையான முறையில் அதை எப்படி நீக்குவது என்பதுபற்றிப் பார்ப்போம்.

முகப்பருக்கள் மறைய எளிய வழிமுறைகள்
  1. திருநீற்றுப்பச்சிலையை அரைத்து முகப்பரு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் எளிதில் குணம் கிடைக்கும்.
  2. திரிபலா பொடி கசாயத்தால் முகம் கழுவிவந்தாலும் பருக்கள் நீங்கும்.
  3. குங்குமாதி தைலத்தைப் பருக்களின்மீது தடவி வர, பருக்கள் மறைவதோடு தழும்புகளும் விரைவில் நீங்கும்.
  4. அரிசி மாவில் செய்யப்பட்ட நாமக்கட்டியை உரசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பரு நீங்கும்.
  5. வெள்ளரிப் பிஞ்சை தக்காளி ஜூஸில் ஊற வைத்துத் தொடர்ந்து முகம் கழுவி வர விரைவில் பரு மறையும். அத்துடன் மீண்டும் முகப்பரு வருவதைக் கட்டுப்படுத்தும்.
  6. எலுமிச்சைச் சாற்றுடன் நீர் சேர்த்து பரு உள்ள இடங்களில் தடவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பருக்கள் மறையும். சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கையும் எலுமிச்சைச் சாறு நீக்கும்.
  7.  தேன் மெழுகையும், சர்க்கரையையும் சேர்த்து குழைத்து முகப்பருக்களின் மீது தடவி வர பருக்கள் விரைவில் மறைந்து முகம் பளபளக்கும்.
  8. வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள்இ சந்தனம் சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வந்தால் பரு நீங்கும்.
  9. அருகம்புல் சாறு, பன்னீர், பப்பாளி விழுது ஆகியவற்றை சற்று குழைத்து முகத்தில் தடவி உலர்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவலாம். இது சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட கருமையை அகற்றுவதுடன், முகப்பருக்களையும் மறையச்செய்யும்.
  10. வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து நீரில் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இம்முறையை தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் பருக்கள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும். இந்த கலவையை கண்களுக்கு கீழ்ப்புறம் தடவக்கூடாது.
  11. 4 துளசி இலை, சிறிதளவு வேப்பந்தளிர், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக அரைத்து அதை பருக்களின் மீது தடவி, 15 நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் முகத்தை கழுவினால் சருமம் மிருதுவாகி பருக்களும் மறையும்.
  12.  அருகம்புல் பொடி, குப்பை மேனி இலைப்பொடி இரண்டையும் சமஅளவு எடுத்து கலக்கி இரவில் பருக்களின் மீது தடவி காலையில் முகத்தை கழுவவும். ஒரு வாரம் தொடர்ச்சியாக இம்முறையை கடைப்பிடித்தால் பருக்கள் அகன்று முகம் மிளிரும்.
  13. சோற்றுக்கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. காற்றாழையின் நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்து, நீரில் நன்றாக அலசியபின், சோற்றை கூழாக்கி  முகத்தில் தடவிவர, பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
முகப் பருக்களைத் தடுப்பதற்கு தவிர்க்க வேண்டியவை
  1. பவுடர், அழகு சாதன கிரீம்கள் உபயோகப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
  2. முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயனத்தன்மை இருக்கிறது. இது சருமத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
  3. தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவற்றைத் தனித்தனியாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு இருப்பவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றொருவர் பயன்படுத்தும்போது அவருக்கும் பரவக்கூடும்.
  4. முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும்.
  5. ​பொடுகுத் தொல்லை,​ நீளமாக நகம் வளர்த்தல்,​ முறையற்ற உணவுப்பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பருக்கள் உடனடியாக மறைய எளிய வைத்தியம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்