
பரீட்சை வினாத்தாள் வெளியீடு: விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பம்
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வினாத்தாளின் கேள்விகள் மற்றொரு தாளில் கையாள் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியானமை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
