பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்-

கல்முனை கல்வி வலய மருதமுனை கமு/கமு/அல்- ஹம்றா வித்தியாலத்திலிருந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சன்க்கிழமை பாடசாலை அதிபர் ஐ. உபைதுல்லாஹ் தலைமையில் பாடசலை கேட்போர் கூடத்தில் விமர்சையாக இடம்பெற்றது.

கடந்த கால அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைபெறாமல் இருந்த 2019, 2020, 2021 ஆகிய வருடங்களில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கோலாகலமான முறையில் மாணவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டு இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் கலந்துகொண்டார்.

மேலும், விசேட அதிதியாக இப்பாடசாலையின் பழைய மாணவியும், மருதமுனையின் முதல் பெண் சிவில் நிர்வாக சேவை அதிகாரியுமான, உதவி பிரதேச செயலாளர் அய்மா நிஹ்மதுல்லாவும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம். ஸம்ஸம் ஆகியோர் கலந்து கொண்டார்.

மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்ற இந்த பாராட்டு விழாவில், அரங்கம் நிறைந்த கல்வியலாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பாடசாலை பிரதி மற்றும் உப அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், மாணவர்களின் பெற்றோர், மாணவ  மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.