பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை ஒழுங்கு முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை திருத்தம் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த வருட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை வழங்குமாறு அமைச்சுப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்