அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் அவரது மனைவி பெட்டினா டிரம்ப், தங்களது திருமணத்தையொட்டிய சில கொண்டாட்டங்களுக்கான செலவுகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான தொழிலதிபர் உமர் கிரெம்லெவ் ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பஹாமாஸில் நடைபெற்ற மூன்று நாள் கொண்டாட்டத்தில், தனியார் தீவை வாடகைக்கு எடுத்தது மற்றும் பிரமாண்ட வாணவேடிக்கை உள்ளிட்ட செலவுகளுக்காக பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் கிரெம்லெவ் செலுத்தியதாக ProPublica செய்தி வெளியிட்டது. டிரம்ப் ஜூனியரும் பெட்டினாவும், இது திருமணத்திற்குப் பிறகு நண்பர்களுக்காக நடைபெற்ற கொண்டாட்டம் என்றும், கிரெம்லெவ் தங்களுக்கு வழங்கிய “மிகவும் தாராளமான திருமணப் பரிசு” என்றும் தெரிவித்துள்ளனர்.
கிரெம்லெவ் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) தலைவராக உள்ளதுடன், புடினுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் 2026 ஏப்ரலில் புடினிடமிருந்து Order of Friendship என்ற ரஷ்ய அரச விருதையும் பெற்றுள்ளார். இந்தப் பின்னணியில், அமெரிக்க அதிபரின் மகன் இவ்வளவு பெரிய வெளிநாட்டு பரிசை ஏற்றுக்கொண்டது நெறிமுறை மற்றும் வெளிநாட்டு செல்வாக்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.









