பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தை ஜூலி சாங் பார்வையிட்டார்

-யாழ் நிருபர்-

பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் தலைமை காரியாலயத்தை இன்று காலை 8.15 மணியளவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டு பனை உற்பத்தி தொடர்பில்  ஆராய்ந்து கொண்டார்

இதன்போது பனை அபிவிருத்திச் சபையினுடைய தலைவர் கிருஷ்ணராஜா பத்திராஜா, உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் தனபால உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பனை அபிவிருத்திச்  சபையினுடைய உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்