பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய எண்ணைக்காப்பு
வரலாற்று சிறப்பு மிக்க பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகிய திருவிழாவில் இன்றைய தினம் காலை 7.00 மணிமுதல் பக்தி பூர்வமாகஇ பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூட்டம்இ எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்