பதுளையில் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து தொடர்பில் ஆய்வு செய்ய முடிவு
பதுளை பகுதியில், விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்தை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று ஆய்வு செய்யவுள்ளது.
பதுளை – மஹியங்கனை வீதியில் துன்ஹிந்த – திம்பிரிகஸ்பிட்டிய 4 ஆம் கட்டைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 31 பேர் காயமடைந்திருந்தனர்.