பதவி விலகல் கடிதத்தை இந்திய ஜனாதிபதியிடம் கையளித்தார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி விலகல் கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இன்று புதன் கிழமை கையளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தன.

இதற்கமைய, நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அங்கத்துவம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களையும், ராஹூல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அங்கத்துவம் வகிக்கும் இந்தியா கூட்டணி 232 இடங்களையும் கைப்பற்றின.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 272 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சி 240 ஆசனங்களையே பெற்றிருந்தது.

எனினும், கூட்டணியாக ஆட்சி அமைப்பது தொடர்பில் பாரதிய ஜனதா கட்சி இன்று மாலை கலந்துரையாடவுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்