பண்டாரவளையில் மாணவியை வன்**கொடுமை செய்ய முயற்சித்த மர்ம நபர்

-பதுளை நிருபர்-

பண்டாரவளை ஒத்தேகடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர் தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு வந்து கொண்டிருந்த போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் அருகில் உள்ள குறித்த மாணவியை மயானத்திற்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, ​​மாணவி சந்தேக நபரின் கையை கடித்துவிட்டு தப்பி வீட்டுக்குத் திரும்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் பின்னர் மாணவி சிகிச்சைகளுக்காக தியத்தலாவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் பண்டாரவளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்