பட்டம் பறக்கவிட்ட சிறுவன்: விசம் கொடுத்த மர்ம நபர்

ஹொரண வறல்லஹேன பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் பட்டமொன்றை பறக்கவிட்டு கொண்டிருந்த சிறுவனுக்கு இனந்தெரியாத ஒருவரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குளிர்பானத்தை அருந்தி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

வறல்லஹேன பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனே இவ்வாறு வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த வயல் வெளியில் சிறுவன் பட்டத்தை பறக்க விட்டுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஐஸ் பானம் அடங்கிய குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.எனினும் சிறுவன் அதனை ஏற்க மறுத்த நிலையில், இனந்தெரியாத நபர் அதனை சிறுவனுக்கு பலவந்தமாக கொடுத்துள்ளதார்.

அதை குடித்த சிறுவன் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மயக்கமடைந்த சிறுவன் தற்போது ஹொரணை ஆதார வைத்தியசாலையின் விடுதி இலக்கம் ஆறில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.