பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசுபிக் கடலில் ஆஸ்திரேலியா (Australia) – இந்தோனேசியா (Indonesia) அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கமானது பப்புவா நியூ கினியாவின் (Papua New Guinea) வடக்கு பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 6.56 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.

இந்நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவின் கிம்பே பகுதியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில், 64 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.

எனினும், இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்