நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு: 100 பேர் பலி

நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அடையாளம் தெரியாத சில நபர்களினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 100 பேர் பலியாகியதுடன், பலர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம், நைஜீரியாவின் க்வெர் வெஸ்ட் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 500 பேர் உயிரிழந்ததுடன், 22 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.