நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்: 18 பேர் பலி

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இரண்டு சிறிய ரக பேருந்துகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்வடைந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 14 ஈரானியர்களும், 2 ஆப்கானிஸ்தான் பிரஜைகளும் அடங்குவதாகவும் ஏனைய இருவரின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் கர்பலாவில் இடம்பெறவிருந்த மத நிகழ்வொன்றுக்காக பயணித்தவர்களே விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.