நேபாளம் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
மும்பையில் நடைபெறும் குறித்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதன்படி நேபாளம் அணிக்கு 185 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
