நெல் கொள்வனவு குறித்து வெளியான தகவல்

நெல்லை கொள்வனவு செய்ய நாளை வியாழக்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நாளைய தினம் முதல் புதிய விலைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1 கிலோகிராம் நாடு நெல் வகை – ரூபாய் 120ஆகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை, 1 கிலோகிராம் சம்பா – ரூபாய் 125ஆகவும் 1 கிலோகிராம் கீரி சம்பா – ரூபாய் 132ஆகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.