நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

🥫🥫மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சசனையும் இல்லாமல், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால், நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடித்துவர வேண்டும்.

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்
  1. நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும்.
  2. எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
  3. நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. முக்கியமாக இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD) என்னும் உட்பொருள் உள்ளது. இது ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து பாதுகாப்பளித்து, புற்றுநோயில் இருந்து நம்மைத் தடுக்கும்.
  4. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
  5. நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.
  6. முக்கியமாக நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்  சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும்.
  7. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமுள்ளது. ஒவ்வொரு நெல்லிக்காயிலும் 600-700 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. இது உங்களின் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
  8. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் அது உங்கள் உடல் அமைப்பில் உள் நச்சுத்தன்மையை நீக்கும். நெல்லிக்காய் சாற்றில் தண்ணீர் உள்ளது, இது அதிக சிறுநீர் உற்பத்திக்கு உதவும். அதிகப்படியான சிறுநீர் ஓட்டம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றவும், சிறுநீரக கற்களை அகற்றவும் உதவுகிறது.
  9. நெல்லிக்காய் சாற்றை தினமும் உட்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கண்புரை, எரிச்சல் மற்றும் ‘ட்ரை ஐஸ்’ போன்ற பிரச்சனைகளைப் போக்கும்.
  10.  காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், நாள் முழுவதும் அதிக ஊட்டச்சத்தும் ஆற்றலும் கிடைக்கும்.
  11. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைத்து நல்ல வடிவத்தை பெற உதவும். நெல்லிக்காய் சாறு செரிமான அமைப்பை வலுப்படுத்தும். உடன் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும்.

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்