பிரபல பிரிட்டிஷ் ராக் இசைக்குழு ஒயாசிஸ்(Oasis), 2027ஆம் ஆண்டில் மீண்டும் பிரம்மாண்டமான சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளது. ‘ஒயாசிஸ் லைவ் ’27(Oasis Live ’27)’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சுற்றுப்பயணத்தில் மொத்தம் 38 நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
சுற்றுப்பயணம் 2027 மே 21ஆம் தேதி கிளாஸ்கோவில் தொடங்குகிறது. பின்னர் இசைக்குழுவின் சொந்த நகரமான மான்செஸ்டரில் உள்ள எதிஹாத் ஸ்டேடியம்(Etihad Stadium)-ல் 11 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும், 1996ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இசை நிகழ்ச்சிகளை நடத்திய நெப்வொர்த்(Knebworth) தளத்துக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒயாசிஸ்(Oasis) மீண்டும் திரும்புகிறது; அங்கு செப்டம்பரில் நான்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துடன் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. லியம் கேலகர்(Liam) மற்றும் நோயல் கேலகர்
(Noel Gallagher) சகோதரர்கள் மீண்டும் இணைந்த 2025 சுற்றுப்பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த புதிய சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.









