நுவரெலியாtpல் பொதுத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

-நுவரெலியா நிருபர்-

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று திங்கட்கிழமை பிற்பகல் வரை ஒரேயொரு சுயேச்சைக் குழுவே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்காக இதுவரை 08 சுயேச்சைக் குழுக்கள் கட்டுபணத்தை வைப்பிலிட்டுள்ளதாக மாவட்டத் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 04ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கும் பணி ஆரம்பமாகியது வார விடுமுறை முடிந்து மீண்டும் திங்கட்கிழமை (07) காலை 8.00 மணிக்கு மீண்டும் ஆரம்பமானது.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை அலுவலக நாட்களில் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ப்படும் என தெரிவிக்கப்படுகிறது

இதற்காக நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது வேட்புமனுக்களை கையளிக்கும் நிகழ்வு மாவட்ட தேர்தல் அதிகாரியும் நுவரெலியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருமான திரு.லஹிரு கலுகம்பிட்டிய தலைமையில் இடம்பெற்றது