நுவரெலியாவில் இலங்கை வனவியல் நிறுவனம் திறப்புவிழா

நுவரெலியா, ஹவாஎலியா, சந்தென்ன பிரதேசத்தில் சர்வதேச தரத்திற்கமைய நிர்மாணிக்கப்பட்ட இலங்கை வனவியல் நிறுவனம் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் உத்தியோகபூர்வமாக நேற்று சனி கிழமை திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிறுவனமானது 53 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 1500 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் வளாகத்தில் 17 உத்தியோகபூர்வ குடியிருப்புகள், ஒரு விளையாட்டு அரங்கம், 80 பேர் தங்கக்கூடிய ஒரு தங்குமிடம், ஒரு நேரத்தில் 150 பேர் தங்கக்கூடிய ஒரு உணவகம், ஒரு ஆடிட்டோரியம், ஒரு நிர்வாக கட்டிடம், விரிவுரை மண்டப வசதிகள், ஒரு நூலகம், ஒரு வாகன நிறுத்துமிடம் மற்றும் பல வசிதிகள் காணப்படுகின்றவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பாடசாலையை விட்டு வெளியேறுபவர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பாடநெறிகளில் சேர முடியும் என்பதுடன் இதன் மூலம் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வருமானம் ஈட்டும் செயற்பாடுகளை தொடங்கவும், சுற்றுச்சூழல் மற்றும் காடுகளை விரும்புவோருக்கு அந்தப் படிப்புகளைப் படிக்கும் வாய்ப்பை வழங்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் இலங்கை வனவியல் நிறுவனம் திறப்புவிழா

நுவரெலியாவில் இலங்கை வனவியல் நிறுவனம் திறப்புவிழா

நுவரெலியாவில் இலங்கை வனவியல் நிறுவனம் திறப்புவிழா