நுவரெலியாவில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
-நுவரெலியா நிருபர்-
நாட்டில் பல்வேறு பாகங்களிலிருந்து இயற்கை எழில்மிகு நுவரெலியா நகரை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.
வார விடுமுறையையொட்டியும், தற்போது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையிலும், நுவரெலியாவில் காணப்படும் பல பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளங்களை நாடி வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
இதனால் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுவதும் நிரம்பி காணப்படுகின்றன.
ஒவ்வொரு தொடர் விடுமுறையிலும், நுவரெலியாவிற்கு சர்வதேச உல்லாசப் பயணிகள் மாத்திரமன்றி, உள்ளூர் உல்லாசப் பயணிகளும் பெருமளவில் வருகை தந்து தங்களுடைய பொழுதைபோக்கி வருகின்றமை வழமையாகும்
இதனால் சுற்றுலா பகுதிகளில் மிகுந்த சுறுசுறுப்பாகவே காணப்படுகின்றன.
இவ்வாறு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்குத் தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட முக்கிய தேவைகளை நிறைவேற்றுவதில், நுவரெலியாவிலுள்ள தனியார் ஹோட்டல் உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.