நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

-நுவரெலியா நிருபர்-

 

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணத்தால் தொடர்ந்து தற்போது பல பிரதேசங்களில் கன மழை பெய்து வருகிறது.

அதேநேரத்தில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு வாரங்களாக மாலை வேளையில் அதிகரித்து காணப்படுகின்றது.

பிற்பகல் மூன்று மணிக்கு பின்னரான காலப்பகுதியில் மழையுடன் பனி மூட்டமும் வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது.

நுவரெலியா வென்டிகோணர் பகுதியில் அருகில் வரும் வாகனம் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில்நுவரெலியா தொடக்கம் நானுஓயா பிரதேசம் வரை கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது

இதனால் அவ் வீதியில் மிக அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்