
நீர்மின்னுற்பத்தி நிலையத்தில் விபத்து: நால்வர் பலி
இத்தாலியின் வடக்கு பகுதியில் பொலோக்னா நகரில் இருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நீர்மின்னுற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த பகுதி தற்போது நீரில் மூழ்கியுள்ளதுடன் தீப்பரவலும் ஏற்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு இடம்பெற்ற பராமரிப்புப் பணிகளின் போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
எவ்வாறாயினும் இதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
