நீர்கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

நீர்கொழும்பின் பல பகுதிகளில் இன்று (07) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை நீர் விநியோகம் தடைப்படும் என சபை அறிவித்துள்ளது.

பெரியமுல்ல, எட்டுகல, குடபாடுவ, தலுபொத்த, கட்டுவ, லெவிஸ் ப்ளேஸ், செல்லகந்த வீதி, வெல்ல வீதி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

நீர்கொழும்பு நீர் விநியோக அமைப்பின் பெரியமுல்ல நீர் தாங்கியில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது .