நீரோடையிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் சடலம்

கொழும்பில் இளைஞர் ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புஸ்ஸல்லாவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரட்டாசி மேமலை பகுதியில் உள்ள நீரோடையொன்றிலிருந்து இன்று காலை பிரதேச மக்களால் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்