நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
பொல்பித்திகம ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கிரிபமுனேகம பொல்பித்திகம பிரதேசத்தில் வசித்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தனது நண்பர்கள் இருவருடன் ஏரியில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஏரிக்கரைக்கருகிலுள்ள மரத்தின் கிளையில் ஏறி ஏரியில் குதித்த போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்