நீரில் அடித்து செல்லப்பட்ட மூவர்: மகன் உயிரிழப்பு – தாயும் மகனும் மாயம்

குருநாகல் போகமுவ பிரதேசத்தில் இருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரகஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது 9 மற்றும் 5 வயதுடைய 2 மகன்களுமே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நீரில் அடித்துச் செல்லப்பட்ட 09 வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், தாயும் மற்றொரு மகனும் காணாமல்போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்